Our objectives
- Like other ethnic groups in Australia, Tamil speaking parents are keen to pass on their language and culture to their children.
- It is by no means an automatic process and without support, many fail to motivate their children to keep up Tamil as mother tongue.
- It is especially difficult once the child has entered the Australian school system.
- The Tamil speaking child feels isolated because:
He/ She receives all learning in English and Most importantly, does not wish to differ from her or his peers.
In order to override these two major factors and to "win the battle", parents with Tamil speaking background created
MOUNT DRUITT TAMIL STUDY CENTRE in 1991.
- Its purpose is the promotion of the Tamil language and culture amongst the Tamil speaking families located in the area of outer Western Sydney.
பாடசாலையின் முக்கிய நிகழ்வுகள்
- முதலாம் தவணை
ஆசிரியர்கள்; எவ்வாறு நவீன தொழில்நுட்பகளை பயன்படுத்தி கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்ற செயலமர்வுடன் முதலாம் தவணை ஆரம்பம்.
மாணவர்களின் தேவைக்கேற்ப வகுப்புக்களை பிரித்தல்.
தவணைப் பரீட்சை, எழுத்து, வாசிப்பு, பேச்சு, பாட்டு, உரையாடல், கிரகித்தல் என மாணவர்களின் தமிழறிவை தொடர்ச்சியாக மதீப்பீடு செய்தல்.
குடும்ப குதூகல தினம் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஒன்றினைந்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்தலும் BBQ நிகழ்வும்.
- இரண்டாம் தவணை
பாடசாலையின் அனைத்து மாணவர்களும் பங்குபற்றும் பேச்சுப் போட்டி பிறபாடசாலையிலிருந்து வந்த நடுவர்கள் முன்னிலையில் நடைபெறுதல்.
அரையாண்டுப் பரீட்சை, மற்றும் எழுத்து, வாசிப்பு, பேச்சு, பாட்டு, உரையாடல், கிரகித்தல் என மாணவர்களின் தமிழறிவை தொடர்ச்சியாக மதீப்பீடு செய்தல்.
அமைச்சர் விருதிற்கு மேல் பிரிவுக்கும் கீழ் பிரிவுக்கும் பரீட்சைகளின் பெறுபேறுகள் மற்றும் பேச்சுப் போட்டியிலிருந்தும் கல்விக் குழுவினால் மாணவர்கள் பரிசீலிக்கப்பட்டு தெரிவு செய்து அனுப்புதல்.
நியூ சவுத் வேல்ஸ் தமிழ் பாடசாலைகளின் கூட்டமைப்பினால் நடாத்தப்படும் பரீட்சையில் அனைத்து மாணவர்களும் இலவசமாக பங்குபற்றுதல்.
- மூன்றாம் தவணை
பாடசாலை மாணவர்களின் கலை மற்றும் கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் கலைவிழா திட்டமிடலும் கொண்டாட்டமும்.
அமைச்சர் விருது பெற்ற மாணவர்களை கௌரவித்தலும் நீண்டகால சேவையாற்றிய ஆசிரியர்களை கௌரவித்தலும்.
- நான்காம் தவணை
வாணி விழா (சரஸ்வதி பூஜை) கொண்டாட்டத்துடன் தவணை ஆரம்பம்.
ஆண்டிறுதிப் பரீட்சை மற்றும் எழுத்து, வாசிப்பு, பேச்சு, பாட்டு, உரையாடல், கிரகித்தல் என மாணவர்களின் தமிழறிவை தொடர்ச்சியாக மதீப்பீடு செய்தல்.
நத்தார் பண்டிகை கொண்டாட்டமும், பரிசளிப்பு விழா மற்றும் புதிய செயற்குழு அங்கத்தவர்களை தெரிவு செய்யப்படுவதுடன் இராப்போசன விருந்தும்.